தனது பதவியை ராஜினாமா செய்த உயர்கல்வித்துறை அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


கேரளா மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.டி. ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்க கடத்தல் தொடர்பாக என்ஐஏ, அமலாக்கப் பிரிவு மற்றும் சுங்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. தங்க கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இதில் தங்க கடத்தல் தொடர்பாக அம்மாநில உயர் கல்வித் துறை ஜலீல் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல் ராஜினாமா செய்ய முதலமைச்சர் பினராயி விஜயனை கடந்த சில நாட்களுக்கு முன்பு லோக் ஆயுக்தா வலியுறுத்தியது. 

லோக் ஆயுக்தாவின் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஜலீல் கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்த விசாரணை நடைபெறும் முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala minister jaleel resign the post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal