பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் எஸ்டிபிஐ (SDPI) தீவிரவாத அமைப்புகள் தான் - கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
Kerala HC Say About SDPI PFI
கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி கேரள மாநிலம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த எஸ்.சஞ்சித் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிடக்கோரியும் சஞ்சித் மனைவி அர்ஷிகா கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இவரின் இந்த இந்த வழக்கில் கடந்த 5ந்தேதி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மனுவை தள்ளுபடி உத்தரவிட்டனர்.
மேலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) ஆகியவை தீவிரவாத அமைப்புகள் என்பதில் எந்த சந்தேமமுமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இவை கடுமையான வன்முறை செயல்களில் ஈடுபட்ட போதிலும், அவை தடை செய்யப்பட்ட இயக்கங்கள் இல்லை என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார்.

மேலும், இந்த கொலை வழக்கில் 90 நாட்களுக்குள் விசாரணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். குற்றவாளிகளைக் காப்பதில் மாநில புலனாய்வு அமைப்புக்கு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. இந்த வழக்கில் பாகுபாடான அணுகுமுறை என்று ஊகிக்க முடியாது.
எனவே, சில குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர் என்ற காரணத்திற்காக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று அந்த தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எஸ்.டி.பி.ஐ. அமைப்பை தீவிரவாத அமைப்பு என்ற நீதிபதியின் கருத்துக்களை நீக்கக்கோரி, மேல்முறையீடு செய்யப் போவதாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் அஷ்ரப் மௌலவி தெரிவித்துள்ளார்.
English Summary
Kerala HC Say About SDPI PFI