புஸ்ஸி ஆனந்த் & நிர்மல் குமாரை கைது செய்ய 3 சிறப்பு தனிப்படைகள்!
Karur Stampede TVK Vijay Bussy Anand nirmal kumar
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சோக சம்பவம் தமிழகத்தையே அல்லாமல் நாடு முழுவதையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருங் குற்ற விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இதற்கிடையில், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் முன்ஜாமின் கோரி மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதேசமயம் கரூர் கூட்ட நெரிசல் துயரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரி த.வெ.க. மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சார்பில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய 3 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Karur Stampede TVK Vijay Bussy Anand nirmal kumar