நானும் யாதவனே! கலைஞரின் அசத்தலான பேச்சு!
நானும் யாதவனே! கலைஞரின் அசத்தலான பேச்சு!
மதுரையில் உள்ள யாதவர் கல்லுாரியில் முதல்வராகப் பணியாற்றிக் கொண்டிருந்த, தமிழ்க்குடிமகன், கலைஞரின் தீவிர ஆதரவாளர். கலைஞரின், தமிழுக்கு தான் அடிமை என்று சொன்னவர். கலைஞரை, தங்கள் கல்லுாரிக்கு பேச வருமாறு, பல முறை அவரை அழைத்திருந்தார். 1960- கால கட்டங்களில், அரசியலில், கலைஞர், வெகு பிசியாக இருந்த நேரம் அது. எப்போதும், அண்ணாத்துரையுடன் தான் பயணித்துக் கொண்டிருப்பார்.
அதனால், தமிழ்க்குடிமகன் பல முறை கேட்டுக் கொண்டும், அவரால், யாதவர் கல்லுாரிக்கு உடனே வர இயலவில்லை. பின், கலைஞர், இதற்காகவே, ஒரு நாளை ஒதுக்கினார். மதுரையில் உள்ள யாதவர் கல்லுாரிக்கு, கலைஞர், வருகை தந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. அந்தக் கல்லுாரியில் படித்த பல மாணவ மாணவிகள், கலைஞரின் வருகையை ஒட்டி, மேடையில், தமிழிலே, மிக அருமையாகப் பேசி அசத்தினார்கள்.
இறுதியாகக், கலைஞர் தன் பேச்சைத் துவக்கிய போது, “நானும் யாதவன் தான்” என்றார். எல்லோரும், அவரை அதிர்ச்சி கலந்த, ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். பின் கலைஞர், தன் பாணியில், “நானும் யாதவன் தான். பழகிய நண்பரைப் பிரி“யாதவன்”. சூது, வாது அறி“யாதவன்”. அன்பையும், நட்பையும், தவிர வேறு ஒன்றும் தெரி“யாதவன்” என்றார். யாதவர் கல்லுாரி விழாவினை ஒட்டி, அவரது சமயோகித பேச்சைக் கேட்டுக் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள், யாதவர் கல்லுாரி மாணவர்கள்!
English Summary
karunanidhi speech in yadava college