வருங்கால முதல்வர்... கோஷமிட்ட காங்கிரஸ் எம்எல்எஏ-விற்கு நோட்டீஸ் அனுப்பிய காங்கிரஸ்!
Karnataka congress Cm Candidate Sivakumar MLA
கர்நாடக அரசியலில் மீண்டும் முதல்வர் பதவி தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது. சன்னகிரி காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜு வி. சிவகங்கா, “டிசம்பர் மாதத்திற்குப் பிறகு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அடுத்த முதல்வராக வருவார்” என்று தாவங்கேரில் ஊடகங்களிடம் தெரிவித்தார். இதனால், நீண்டநாட்களாக அடங்கியிருந்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.
முதல்வர் சித்தராமையா தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்வார் என காங்கிரஸ் தலைமை முன்பே அறிவித்திருந்தது. ஆனால், சிவகங்காவின் இந்த கருத்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் நிவேதித் ஆல்வா வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் மாற்றம் குறித்த எம்எல்ஏவின் பேச்சு ஒழுக்க மீறலாகும். இது கட்சிக்குள் சங்கடத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடியது. எனவே, அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏழு நாட்களில் பதில் அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், “முதல்வர் பதவி மற்றும் கட்சி தொடர்பான விஷயங்களில் யாரும் கருத்து சொல்லக்கூடாது. எம்எல்ஏக்கள் ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற கருத்துகள் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும். பலமுறை எச்சரித்தும், சிவகங்கா மீண்டும் இதுபோன்ற கருத்து வெளியிட்டிருப்பது ஒழுங்கு மீறலாகும். எனவே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
English Summary
Karnataka congress Cm Candidate Sivakumar MLA