பணமில்லை எனக் கையை விரிக்கும் அரசு, கொள்ளை விலையில் மின்சாரம் வாங்குவதுதான் "மாற்ற" அரசியலா? கனிமொழி எம்.பி கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையைச் சமாளிக்க, தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற வரலாறு காணாத விலைக்கு வாங்குவதற்கு மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

"தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனையைத் தீர்க்க வக்கில்லாமல், காற்று இல்லை, மழை இல்லை என்று தினமும் கதையடித்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது உண்மையை மறைக்க முடியாமல் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் யூனிட் ஒன்றுக்கு ரூ.35 கொடுத்து மின்சாரத்தை வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்."

மேலும், திராவிட மாடல் ஆட்சியின் போது ரூ.10-க்குக் குறைவான விலையிலேயே மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசின் மெத்தனப்போக்கால் மாநிலத்தின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் பணமில்லை எனக் கையை விரிக்கும் அரசு, கொள்ளை விலையில் மின்சாரம் வாங்குவதுதான் "மாற்ற" அரசியலா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசின் விளக்கம் மற்றும் பின்னணி
மின் தேவை திடீரென அதிகரித்திருப்பதும், காற்று மற்றும் மழை இல்லாத தற்காலிகச் சூழ்நிலையும் காரணமாகக் கூறப்பட்டாலும், இவ்வளவு அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanimozhi Slams Government Over Procuring Electricity at Rs 35 Per Unit


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->