"உலக அளவில் BAPS குழுவின் பிற்போக்குத்தனம் அம்பலம்": ஈபிள் கோபுர விவகாரத்தில் கனிமொழி எம்.பி. கருத்து! - Seithipunal
Seithipunal


பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தைப் பார்வையிடச் சென்ற குஜராத்தைச் சேர்ந்த 'BAPS' இந்து மதக் குழுவினர், தங்களது வருகையின் போது அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களுடனான தொடர்பைக் குறைக்க வேண்டும் எனக் கோரி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்து ஈபிள் கோபுரத்தின் பெண் ஊழியர்கள் ஒன்றிணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள நிலையில், இது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஈபிள் கோபுரத்தில் காவி உடை அணிந்த குழுவினர் சர்ச்சையை ஏற்படுத்தியது ஆச்சரியமான விஷயமல்ல. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் பிற்போக்குத்தனமாக நடத்தப்படுகிறார்கள்; இதைக் கேள்வி கேட்டால் 'தீட்டு' என்று சொல்லி, பெண்களையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈபிள் கோபுரத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் ஒன்றிணைந்து, தங்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் அவமதித்ததற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுப் போராடியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், உலக அளவில் BAPS இந்து மதக் குழுவினரின் இத்தகைய பிற்போக்குத்தனம் அம்பலப்படுத்தப்படுவதைக் காண ஆனந்தமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanimozhi MP Reacts to Eiffel Tower BAPS Controversy Says Global Exposure of Regressive Stance Brings Joy


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->