மாநிலங்களவையில் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட கமலஹாசன்...!
Kamal Haasan took oath Tamil Rajya Sabha
நேற்றுடன் தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ,அன்புமணி ராமதாஸ், முகமது அப்துல்லா,சண்முகம், என். சந்திரசேகரன், வில்சன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது.இதற்கிடையே,இந்த 6 இடங்களுக்கான தேர்தல், கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது.

அதில் தி.மு.க.வை சேர்ந்த கவிஞர் சல்மா, வில்சன்,எஸ்.ஆர்.சிவலிங்கம், தி.மு.க. சார்பில் களமிறக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் 'கமல்ஹாசன்'ஆகியோர் இதில் தீர்வு செய்யப்பட்டார்கள்.அதேபோல அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகினர்.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக 'மக்கள் நீதி மய்யம்' தலைவர் 'கமல்ஹாசன்' பதவியேற்றார். அவர் தமிழில் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.
அவரைத்தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றனர்.மேலும், வரும் 28-ந்தேதி, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் பதவியேற்கின்றனர்.
English Summary
Kamal Haasan took oath Tamil Rajya Sabha