சமூகநீதி, இடஒதுக்கீடு வெற்றி., வெற்றி.! கமல்ஹாசன் பரபரப்பு டிவிட்.! - Seithipunal
Seithipunal


மருத்துவப் படிப்பிற்கான மத்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி என்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன்

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க, தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை, 2020-2021 ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்து, மத்திய அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், வரும் 2020 -21 கல்வி ஆண்டில் (நடப்பு கல்வியாண்டிலேயே) மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிப்ளமோ, பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் சேர ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் அந்த பதிவில், "மருத்துவப் படிப்பிற்கான மத்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி. 

நீட் தேர்வு ரத்து, மத்திய தொகுப்புமுறையை கைவிடுதல் என நாம் எட்ட வேண்டிய இலக்குகள் இன்னும் இருக்கின்றன." என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போதும், செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்து சரியான விளக்கம் அளிக்காமல் கமலஹாசன் விழிபிதுங்கி நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal haasan say about obc reservation


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->