#BigBreaking || அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா.,? அமைச்சர் ஜெயக்குமார் சற்றுமுன் அதிரடி பேட்டி.! - Seithipunal
Seithipunal


கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் பதவியை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிரந்தரமாக வழங்கி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகள் உருவாக்கப்பட்டது. அதிமுகவின் சட்ட விதிகளும் திருத்தப்பட்டன. 

அதிமுகவின் இந்த பொதுக்கூட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். குறிப்பாக சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரி சசிகலா தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, தற்போதைய நிலையே அதிமுகவில் நீடிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு பட்டியலிடப்பட்ட படாமல் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்ய கோரி சசிகலா தரப்பு நடவடிக்கையை தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி சசிகலா தொடர்ந்த வழக்கை, உடனே விசாரிக்கவேண்டும் என சசிகலா தரப்பில் சென்னை சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 15ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், "மனு யார் வேண்டுமானாலும் போடலாம். உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. சசிகலாவுக்கும் டிடிவி தினகரனுக்கும்  அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, தேர்தல் ஆணையமும் அதிமுக கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் எங்களுக்கு வழங்கி உள்ளது. இன்று அதிமுக தலைமை வலிமையாக உள்ளது. வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் ஒரு மனுவை அளித்தால், அதற்கெல்லாம் பொறுப்பாக முடியாது. எங்களை பொறுத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது. அது தான் என்றுமே செல்லுபடியாக கூடியது." என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyakumar say about sasikala admk issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->