Dr.ராமதாஸை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி.! மத்திய அரசுக்கு நெருக்கடி.!  - Seithipunal
Seithipunal


ஆன்லைன் கேம்கள் அதிகரித்ததை தொடர்ந்து, அதை பயன்படுத்தி நடக்கின்ற சூதாட்டமும் அதிக அளவில் உயர்ந்து வருகின்றது. இதன் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவதும் அநடந்தேறி வருகின்றது. இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டங்களை இந்தியாவில் தடை செய்யவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றார். 

அதுபோல தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் உள்ளிட்டவைகளுக்கு ஆந்திராவில் தடை விதிக்க இணைய சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறு, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதி இருக்கின்றார்.

இதுகுறித்து, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு அவர் எழுதி இருக்கும் கடிதத்தில், 'ஆன்லைன் கேம் மற்றும் சூதாட்டம் நம் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற செயல். ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலமாக இளைஞர்கள் வீட்டில் இருந்தபடியே சூதாட்டத்தில் ஈடுபட்டு வாழ்வை தொலைக்கின்றனர். 

ஆன்லைன் மூலமாக இந்த தவறுகள் நடக்கின்ற காரணத்தால், அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. மாநில சட்டத்தின் கீழாக, இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு உடனைடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும். இணையதள நிறுவனங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JEGAN MOGAN REDDY LETTER TO CENTRAL GOVT ABOUT ONLINE GAMBLING


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->