அடுத்த பரபரப்பு ‌.. ஓ.பி.எஸ், டி.டி.விக்கு வாழ்த்து சொன்ன ஜெயக்குமார்.! அதிர்ச்சியில் அண்ணாமலை - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வடசென்னை பகுதியில் அதிமுக வேட்பாளருக்காக தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் " நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடு என்பது அதிமுக திமுகவுக்கு மட்டும் தான். மற்ற கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள் வீணாக போய்விடும். 

அந்த வகையில் அதிமுகவுக்கு வாக்களிப்பது தான் திமுகவுக்கு ஒரு பாடமாக அமையும். அதிமுகவில் 2 கோடி பேருக்கு மேல் தொண்டர்களாக இருக்கின்றார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் கட்சியில் எந்த பிளவும் கிடையாது என மு.க ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் பாஜகவை மதவாத சக்தி, அவர்களுடன் கூட்டணி கிடையாது என கூறிய டிடிவி தினகரன் தற்போது கூட்டணி வைத்துள்ளார். அண்ணாமலையை ஓரங்கட்டி விட்டு ஓபிஎஸ் பாஜக தலைவர் ஆகிவிடுவார். டிடிவி பாஜகவின் பொதுச் செயலாளர் ஆகி வடுவார். இனி அண்ணா திமுகவில் அவர்களுக்கு இடமில்லை என்பதால் பாஜகவில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக போகம் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்" என விமர்சனம் செய்து உள்ளார் ஜெயக்குமார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar says OPS will be become tn BJP president


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->