அதிமுகவிற்கு அடிபணிய முடிவெடுத்த ரஜினி.! அதிரடியாக பதிலடி கொடுத்த அமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினி தமிழக அரசியலில் எந்த அதிசயம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறியதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். 

சமீபத்தில் கமல் 60 பாராட்டு விழா சென்னையில் நடந்தது, இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொன்டு பேசிய ரஜினி, ’ இரண்டு ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவேன் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். இருப்பினும் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மேலும், அவரின் ஆட்சி நீடிக்காது. நான்கைந்து மாதத்தில் கவிழ்ந்துடும் என 99% மக்கள் கூறினார்கள். 

எதிர்க்கட்சிகளும் அதனை செயல்படுத்த பல திட்டங்களை தீட்டினர். ஆனால், அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. அணைத்து தடையை மீறி அந்த ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நேற்றும் தமிழக அரசியலில் அதிசயமும் அற்புதமும் நடந்தது. இன்றும் நடந்தது, நாளையும் நடக்கும். என்று தெரிவித்தார்.

எடப்பாடி ஆட்சியை கைப்பற்றியதையும், அதை நடத்தி வருவதையும் பாராட்டுவது போல் பேசி தான் அதிமுகவிற்கு எதிரானவன் இல்லை என்பது போல தன்னை காட்டி கொள்ள ரஜினி முயற்சிக்கும் விதமாக இருந்தது. 

ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒன்றும், வெறும் அதிசயத்தால் மட்டும் முதல்வார் ஆகவில்லை என்று கோபம் கொண்ட அதிமுகவினர், ரஜினியை விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார், "அதிசயத்தை ரஜினிகாந்த் வேண்டுமானால் நம்பலாம்.  நாங்கள் மக்களையும், வாக்காளர்களையும் மட்டும் தான் நம்பி இருக்கின்றோம். 2021 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதை தான் நாளை அதிசயம் நுழைக்கும் என ரஜினிகாந்த் கூறுகிறார்." என பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar says about rajini


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal