பாஜக உடனான கூட்டணி முறிந்தது! அதிமுக அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என அறிவித்துள்ளார். மேலும் தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவு செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் பாஜகவை நாங்கள் ஏன் எங்கள் தோளில் சுமக்க வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுகிறார். தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை. இதுதான் அதிமுகவின் முடிவு. தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.

அதிமுக தலைவர்களை அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்றால் மேலிடம் சொல்லிதான் இது நடக்கிறது என்று நினைக்கிறேன். அண்ணாமலை குறித்து பாஜக தேசிய தலைமையிடம் தெரிவித்தும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்றால் மேலிடம் சொல்லிதான் இது நடக்கிறது என்று நினைக்கிறேன். அண்ணாமலை குறித்து அதிமுக தொண்டர்கள் இனி விமரிசிப்போம். பாஜகவுக்கு காலே இல்லை. எப்படி தமிழகத்தில் காலூன்ற முடியும்" என கடுமையாக விமர்சனம் செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar announced BJP not in AIADMK alliance


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal