முடிவை மாற்றிய இசக்கி சுப்பையா...! ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற கோரிக்கை...! - சட்டசபை செயலகத்தின் அதிரடி பதில் என்ன...? - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் த.வெ.க. ஆட்சி அமைத்து மூன்று மாதங்களே கடந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் அடுத்தடுத்த நெருக்கடிகளால் ஆட்சியின் நிலைத்தன்மை கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மத்தியில், சட்டசபையில் தனது பலத்தை அதிகரித்து ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கில் காலியாக உள்ள 7 தொகுதிகளிலும் நடைபெற உள்ள இடைத்தேர்தலை எதிர்நோக்கி த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழகத்தின் 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. கணிசமான வெற்றியை பதிவு செய்து ஆட்சி அமைத்தது.

அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகளை த.வெ.க. கைப்பற்ற முடியவில்லை. தேர்தலில் 107 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால், ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன்படி, காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 2 உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 2 உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 2 உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவுடன் த.வெ.க. கூட்டணி ஆட்சியை அமைத்தது.

அமைச்சரவையிலும் கூட்டணி கட்சிகளுக்கு இடம் வழங்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் 2 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தலா ஒருவரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.ஆட்சி அமைக்க கைகொடுத்த கூட்டணி கட்சிகளே தற்போது அரசுக்கு பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இதனால், ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே கூட்டணிக்குள் உரசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி போராட்டம் நடத்தியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமைச் செயலாளரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அரசின் முக்கிய கொள்கை முடிவுகளில் தங்களது கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என்று காங்கிரஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி கட்சிகளின் இந்த அடுத்தடுத்த அழுத்தங்கள் த.வெ.க. அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகியவை த.வெ.க. அரசின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், கூட்டணிக்குள் எழுந்துள்ள அதிருப்தி அரசியல் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.இந்த சூழ்நிலையில், சட்டசபையில் தனது உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய அவசியம் த.வெ.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், த.வெ.க. அரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான அரசியல் சோதனையாக பார்க்கப்படுகிறது.கடைசியாக கரூர் தொகுதி கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. விதிமுறையின்படி, தொகுதி காலியான நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இதனால், அந்த தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேற்கண்ட 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான நீதிமன்றத் தடையும் செப்டம்பர் 8-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் காலம் குறித்த எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. இருப்பினும், தேர்தல் அறிவிக்கப்பட்டால் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் த.வெ.க. தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இடைத்தேர்தலுக்கான பாதையில் உள்ள சட்டரீதியான தடைகளை அகற்றும் நடவடிக்கையிலும் த.வெ.க. அரசு இறங்கியுள்ளது. காலியாக உள்ள 7 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசரமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய 7 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அந்த அனைத்து தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்றால், சட்டசபையில் அக்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 114 ஆக உயரும்.இருப்பினும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 118 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை த.வெ.க. எட்டாது.

ஆனாலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் அ.ம.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு வந்துள்ள ஒரு உறுப்பினரின் ஆதரவுடன் ஆட்சியை தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலை உருவாகும்.இதனால், கூட்டணி கட்சிகளின் நெருக்கடியை சமாளிப்பதற்கும், ஆட்சியை தக்கவைப்பதற்கும் இடைத்தேர்தல் வெற்றி த.வெ.க.வுக்கு மிகவும் முக்கியமானதாகியுள்ளது.

7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது சட்டசபை பலத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், கூட்டணி கட்சிகளிடம் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தவும் த.வெ.க.வுக்கு உதவும்.ஒருபுறம் கூட்டணி கட்சிகளின் அழுத்தம், மறுபுறம் எதிர்க்கட்சிகளின் அரசியல் கண்காணிப்பு என பல்வேறு சவால்களை த.வெ.க. எதிர்கொண்டு வரும் நிலையில், இடைத்தேர்தல் வெற்றி ஆட்சிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, செப்டம்பர் 8-ந் தேதி நீதிமன்றத்தில் வெளியாகும் முடிவு, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Isakki Subbaiah changed his decision Request withdraw his resignation letter What Assembly Secretariat swift response


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->