செவிலியருக்கே இந்த கதியா...? மக்கள் எப்படி நம்புவார்கள்...? - திருச்சி மாணவி மரணத்தால் கொதித்தெழுந்த தமிழிசை சவுந்தரராஜன்...! - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் மாணவி அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்த சம்பவம் தனது மனதை மிகவும் உலுக்கியதாக வேதனை தெரிவித்துள்ளார்.

அவருடன் பணியாற்றிய மாணவிகள் கதறி அழுத காட்சிகள் மனதை பதறவைத்ததாகவும், செவிலியர்களுடன் நேரடியாக பணியாற்றிய அனுபவம் இருப்பதால் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மனஅழுத்தங்களையும் தன்னால் நன்கு உணர முடிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒரு சக மாணவியின் திடீர் உயிரிழப்பு, உடன் பணிபுரியும் மாணவிகளின் மனநிலையை எவ்வளவு பாதித்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. இந்த துயரச் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று” என அவர் பதிவிட்டுள்ளார்.அந்த மாணவி மூச்சுத்திணறல் பாதிப்பால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், உண்மை நிலை முழுமையாக வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியருக்கே இதுபோன்ற சம்பவம் நேரிடுவது, பொதுமக்களின் மருத்துவ நம்பிக்கையையே குலைக்கும் வகையில் இருப்பதாகவும், இதுபோன்ற விவகாரங்களில் ஆட்சியாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவியின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் முழுமையாக ஆராயப்பட்டு, அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தான் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்ற காலத்தில் நடைபெற்ற துணைவேந்தர்கள் கூட்டத்தில், அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தனிப்பட்ட சுகாதார கோப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்ததாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலில் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை மட்டுமல்லாமல், அவர்களின் உடல்நலம் மற்றும் மனநிலையையும் தொடர்ந்து கண்காணிக்கும் நடைமுறையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is this fate of nurses How people believe it Tamilisai Soundararajan outraged by death Trichy student


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->