போராட்டத்தை ஒடுக்குவதே இந்த அரசின் வழக்கமா...? மருத்துவப் பணியாளர்கள் கைதுக்கு கனிமொழி எம்.பி. கடும் எதிர்ப்பு...! - Seithipunal
Seithipunal


பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்களை கைது செய்ததற்கு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"தேர்தல் காலத்தில் மக்களிடம் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுவிட்டு, அவற்றை நிறைவேற்றக்கோரி மக்கள் குரல் எழுப்பும்போது, அவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதையே இந்த அரசு வழக்கமாக கொண்டுள்ளது.

விவசாயிகள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அரசின் வாக்குறுதிகளை நம்பி காத்திருப்போரின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது.மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தங்களது உரிமைகளுக்காக போராடுபவர்களை காவலர்களை கொண்டு கைது செய்து, பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று அரசு நினைக்கிறதா?

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்தித்தால் போதும் என்ற எண்ணத்தில் முதல்-அமைச்சர் இருக்கிறாரா? போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

மேலும், மருத்துவப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is it the custom of this government to suppress protests Kanimozhi MP strongly opposes arrest of medical workers


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->