தேர்தல் முடிவுகளுக்கு மத்தியில் அதிரும் இணையம்...! - வைரலாகும் கலைஞரின் 'அந்த' வைர வரிகள்...!
internet shaking amidst election results artist those diamond lines going viral
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்பட்டு வரும் சூழலில், யாரும் கணிக்காத திருப்பமாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 111-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வலுவான முன்னிலைப் பிடித்து அரசியல் அரங்கையே அதிர வைத்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 63 இடங்களிலும், திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி 60 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்த நிலவரத்தின் அடிப்படையில், விஜய் முதல்வர் பதவியை ஏற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பின்னணியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழகம் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பெண்களுக்கான மாதாந்திர ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை, நகரப் பேருந்துகளில் ‘விடியல் பயணம்’ என்ற இலவச பயண வசதி, ‘தமிழ்ப்புதல்வன்’, ‘தாயுமானவன்’, ‘இல்லம் தேடி கல்வி’ போன்ற சமூக முன்னேற்றத் திட்டங்கள் மக்களின் கவனத்தை பெற்றன.இத்தகைய பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருந்த போதிலும், இந்த முறை தேர்தலில் மக்கள் மனநிலை வேறுபட்ட பாதையில் நகர்ந்தது தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
மாற்றத்தை நோக்கிய எண்ணம் அதிகரித்து, புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் நோக்கி வாக்குகள் திரும்பியுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி கூறிய சிந்தனையூட்டும் வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றன.
ஒரு நேர்காணலில், “நம்மால் பயனடைந்தவர்கள் நமக்கு நன்றி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது; மக்களுக்கு நன்மை செய்ய கிடைத்த வாய்ப்பாகவே அரசியல் வாழ்க்கையை பார்க்க வேண்டும்” என்ற அவரது கருத்து இன்றைய சூழலோடு ஒத்துப்போகும் வகையில் மீண்டும் நினைவுகூரப்படுகிறது.
இந்த சூழலை முன்னிறுத்தி, மக்கள் மனதில் உருவான மாற்றத்தின் அலை தான் இத்தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது என்றும், தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
internet shaking amidst election results artist those diamond lines going viral