தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர்கள் தீவிர ஆலோசனை!
Intensifying Northeast Monsoon DMK leaders hold intensive consultations monsoon precautionary measures
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்துவரும் நிலையில், இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மழைக்காலப் பாதிப்புகளைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கைப் பணிகளைத் துரிதப்படுத்தவும் திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, திமுக தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா, தலைமைச் செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், சென்னை மாவட்டச் செயலாளர்களான மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, நே. சிற்றரசு, மயிலை த. வேலு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பருவமழை தொடர்ந்து தீவிரமடையக்கூடும் என்ற சூழலில், மழைக்கால முன்னெச்சரிக்கைப் பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
English Summary
Intensifying Northeast Monsoon DMK leaders hold intensive consultations monsoon precautionary measures