'கட்சியா அல்லது போதைப்பொருள் கும்பல் கூடாரமா'...? - 135 கிலோ 'மெத்' பறிமுதல் விவகாரத்தில் தவெகவை விளாசும் உதயநிதி...! - Seithipunal
Seithipunal


நாகையில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக தவெக நிர்வாகி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"

135 கிலோ போதைப்பொருள் பறிமுதல் விவகாரம்
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை தவெக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குத் தவெகவின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.பூபாலன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், கட்சிப் பொறுப்பில் இருக்கும் மற்றொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியவருக்குச் சாதகமாகப் பேசுவதுடன், செய்தியாளர்களையும் மிரட்டுவது ஏன்?

“தவெக போதைப்பொருள் வலையமைப்பின் அட்டூழியம் அதிகரிக்கிறது”
கட்சியா அல்லது போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் கூடாரமா என்று கேள்வி எழுப்பும் அளவுக்குத் தவெகவின் போதைப்பொருள் வலையமைப்பின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.தற்போதைய முதல்-அமைச்சரின் ஆட்சியில், அவரது கட்சியிலேயே போதைப்பொருள் கடத்தல் கும்பல்களும், கூட்டமைப்புகளாகச் செயல்படும் குற்றக் குழுக்களும் சுதந்திரமாக உலா வருவதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்”
காட்சிக்காகப் பதிவுகள் வெளியிடுவதிலேயே காலத்தைக் கழிக்காமல், முதல்வர் உண்மை நிலவரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தையும், அவற்றைக் கடத்துவதாகக் குற்றம்சாட்டப்படும் தவெக நிர்வாகிகளையும் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Party or drug gang tent Udhayanidhi makes statement on the 135 kg meth seizure issue


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->