நள்ளிரவில் ஓ.பி.எஸ்-ன் 3 நிபந்தனை.. பழனிச்சாமிக்கு பேரிடி.!! குஷியில் பாஜக தரப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பாஜக மற்றும் ஓபிஎஸ் அணி இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று நள்ளிரவில் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் கிஷான் ரெட்டி, வி.கே சிங், எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் அருண் மேனன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேபோன்று ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர், கு.ப கிருஷ்ணன், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தைக்கு பிறகு செய்தியாளர்கள் சந்தித்த ஓபிஎஸ் "பாஜகவுடன் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடைபெற்றது எங்கள் விருப்பங்களை பாஜகவிடம் தெரிவித்துள்ளோம். எங்களின் பிரச்சனைகளையும் கோரிக்கைகளையும் அவரிடம் தெளிவாக எடுத்துரைத்தோம். 

மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசப் பின்னர் சொல்வதாக தெரிவித்துள்ளனர். முதன் முதலில் எங்கள் கட்சியுடன் தான் பேசி உள்ளார்கள் மற்ற கட்சிகளிடம் கேட்ட பின்னர் சமூகமான முறையில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் முடிவுகள் எட்டப்படும்" என தெரிவித்திருந்தார். இதனால் பாஜக தரப்பு குஷியில் உள்ளது. ஆனால் நேற்று நடைபெற்ற ஆலோசனையில் ஓபிஎஸ் சிலர் நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமானால் தங்களுக்கு 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும், தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் எனவும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முழுக்க வேண்டும் என ஓபிஎஸ் பாஜகவிடம் அழுத்தம் திருத்தமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில் ஓபிஎஸ் இவ்வாறு நிபந்தனை விதித்திருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info ops demand freez two leaf for NDA alliance


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->