கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா - கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு! - Seithipunal
Seithipunal



கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இன்று திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழா கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது தொகுதிகளின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு பாராட்டு  விழா என மூன்று விழாக்கள் ஒன்றாக ஒரே மேடையில் நடைபெற உள்ளன.

இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த விழா ஏற்பாடுகளுக்காக திமுகவின் மூத்த அமைச்சர்கள் எ. வ. வேலு, ஆ. ராசா, சாமிநாதன், முத்துச்சாமி ஆகியோர் கோவையில் இருந்து விழா ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். மேலும் இந்த முப்பெரும் விழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. 

பிரம்மாண்டமாக நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சிக்காக கோவை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும் இந்த விழாவிற்காக கோவை நகரத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று பிற்பகல் கோவை வருகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIA Alliance Leaders Will Participate in DMKs Triple Celebration in Covai Today


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->