சென்னை மண்டலங்களில் மக்கள் வசதி மேம்பாடு: ஏரிகள், படகுகள், சமுதாய கூடங்கள் திறப்பு! - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
Improving public amenities Chennai regions Lakes boats and community halls inaugurated Minister KN Nehru announces
தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாதவரம், மணலி மற்றும் திருவொற்றியூர் மண்டலங்களில் பல அபிவிருத்தி திட்டங்களை இன்று (13.01.2026) தொடங்கி வைத்தார். மாதவரம் ஏரி ரூ.15.03 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் படகு சேவை இன்று முதல் செயல்படுகிறது. அதேபோல், மணலி ஏரி ரூ.10.41 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு, படகு பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்துள்ளது.

பேருந்து நிலையம் மற்றும் சமுதாயக் கூடம்
மணலி பாடசாலை தெருவில் ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டட அடிக்கல் நாட்டப்பட்டது. 80 அடி சாலையில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்டும் பணியும் தொடங்கியுள்ளது.
நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம்
திருவொற்றியூர், சாத்தாங்காடு கிராமத்தில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டது. இங்கு நாய்களுக்கு உணவு, முதற்கட்ட சிகிச்சை, தடுப்பூசி மற்றும் 5–6 நாள் கண்காணிப்பு வழங்கப்படும்.
சுற்றுலா மற்றும் பொது வசதிகள்
மாதவரம் மற்றும் மணலி ஏரிகளில் புதிய படகுகள், ஜெட்ஸ்கி ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட 33 வசதிகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கும். ஏரிகள் மேம்படுத்தப்பட்டு, நடைபாதை, பசுமை மைதானங்கள், குடிநீர் வசதி, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், காத்திருப்பு மையம் மற்றும் முதலுதவி வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.மொத்தம் ரூ.39.78 கோடி மதிப்பீட்டில் 5 முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
English Summary
Improving public amenities Chennai regions Lakes boats and community halls inaugurated Minister KN Nehru announces