108 வேல் யாத்திரை முருகர் ரதத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal



இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் விடுத்துள்ள அறிக்கையில், "ஆன்மிக அரசியல் கட்சியின் சார்பில் அதன் தலைவர் திருமிகு சோம ராஜசேகர் அவர்கள் தலைமையில் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் 108 வேல் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மயில் வாகன வடிவில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் 108 வேல் அடங்கிய வாகனம் முருகர் பக்தியை பரப்பும் நோக்கத்தில் ஆன்மிக நிகழ்ச்சியாக இந்து ஒற்றுமை நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி மக்களிடையே பெரு வரவேற்பை பெற்றது.

04/09/2026 வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் மேற்படி முருகர் ரதத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி ரதம் தீப்பற்றி எரிந்து வருகிறது. இந்தக் காட்சியை பார்க்கும் பொழுது தமிழகத்தில் முருக பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் வெற்றிவேல் யாத்திரை ரதம் நேற்று இரவு 12 30 மணிக்கு மேல் பெட்ரோல் வீசி எறித்த நிலை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே நெய்தவாயல் பகுதியில் திரு சோமராஜ சேகர் அவர்களின் இல்லத்தின் முன்பாக இந்த கொடூர செயல் அரங்கேறி உள்ளது. 

இது சம்பந்தமாக காவல்துறையும் தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகர் ரதத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி சேதத்தை ஏற்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முருக பக்தர்களுக்கும் இந்து சமய ஒற்றுமைக்காக பணியாற்றுகின்ற அனைத்து இந்து சமுதாய தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

இந்து மக்கள் கட்சியின் சார்பில் முருகர் ரதத்தின் மீது நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு வன்மையான கண்டனங்களை தெரிவிக்கின்றோம் குற்றவாளிகள் கண்டறிந்து கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் இத்தகைய குற்றங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி நடைபெறும். கோரிக்கை புகார் மனு சமர்ப்பிக்கப்படுகிறது



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

imk arjun sambath condemn 108 vel yatra van attack


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->