ஜோதிடம் பார்க்கப்போய் வலையில் விழுந்த பெண்...! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கிளி ஜோதிடரின் கொடூரம்...! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஜோதிடம் பார்க்கச் சென்ற கனடா வாழ் பெண்ணின் நம்பிக்கையை பயன்படுத்தி, பரிகார பூஜை என்ற பெயரில் ஆபாசமான பதிவுகளை உருவாக்கி, பின்னர் அவற்றை வெளியிடுவதாக மிரட்டியதாக கூறப்படும் கிளி ஜோதிடரை காவலர்கள் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற 48 வயது நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட 37 வயது பெண் ஒருவர் கனடா குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற பாடல் போட்டியில் பங்கேற்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னை வந்திருந்தார்.

அப்போது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த அவர், பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார்.ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த அந்த பெண், அங்கு கிளி ஜோதிடம் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜோதிடர், அவரது கடந்த கால வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.

அவை துல்லியமாக இருந்ததாக நம்பிய பெண், ஜோதிடருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கியுள்ளார்.அதிக தொகை வழங்கப்பட்டதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜோதிடர், அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு தோஷம் இருப்பதாகவும், குறிப்பிட்ட பரிகார பூஜை செய்தால் பிரச்சினைகள் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் கூறி நம்ப வைத்துள்ளார்.

இதனை நம்பிய பெண், உறவினர் வீட்டில் தங்கியிருந்த அறையில் இருந்து காணொலி அழைப்பு மூலம் ஜோதிடருடன் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியபடி செயல்பட்ட நிலையில், அந்த காட்சிகளை ஜோதிடர் தனது செல்போனில் பதிவு செய்ததாகவும், அதற்காக ரூ.70 ஆயிரம் பெற்றதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அந்தப் பெண் கனடாவுக்கு திரும்பிச் சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி அழைப்பின் பேரில் மீண்டும் சென்னை வந்த அவர், தான் வந்த தகவலை ஜோதிடரிடம் தெரிவித்துள்ளார்.அப்போது, மீண்டும் பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும், அதற்காக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் ஜோதிடர் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஏற்கனவே பதிவு செய்துள்ள ஆபாச காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும், பணம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தனது விருப்பத்திற்கு இணங்க வேண்டும் என்றும் ஜோதிடர் மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஜோதிடரின் மிரட்டலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தியாகராயநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், சம்பவத்தில் தொடர்புடையவர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கிளி ஜோதிடர் இசக்கிமுத்து என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவலர்கள் தென்காசி சென்று அவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 17-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இசக்கிமுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman fell into trap after going to see astrology cruelty parrot astrologer who threatened her pornographic video


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->