பிளைட் வாங்கி ஓட்டப் போறேன்! பென்ஸ் கார் வாங்கி கொடுத்தது யார்? சீக்ரெட் பகிர்ந்த சீமான்! தவெக மீதும் கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான பென்ஸ் கார் வாங்கியதாக சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார். சென்னை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது கார் வாங்கியது, திரள்நிதி வசூல் மற்றும் அரசியல் விமர்சனங்கள் குறித்து விரிவாக கருத்து தெரிவித்தார்.

பேசிய அவர், "நான் மக்களிடம் கேட்பது வாக்கையும், வலிமையையும் தான். எங்கள் கட்சியை என் மக்கள்தான் தாங்கி நிற்கிறார்கள். கட்சிப் பணத்தில் ஒரு தேநீர் கூட குடிக்க மாட்டோம்" என்றார்.

பென்ஸ் கார் வாங்கியது தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், "கார் வாங்கிட்டார் என்று பேசுகிறார்கள். நான் யாருடைய சொத்தையும் விற்று கார் வாங்கவில்லை. உலகம் முழுவதும் என்னை நேசிக்கும் மக்கள் இருக்கிறார்கள். என் மருமகன், நான் அதிக தூரம் பயணம் செய்கிறேன் என்பதற்காக தனது சொந்த செலவில் காரை வாங்கிக் கொடுத்தார். அதிலும் சிலருக்கு பொறுக்கவில்லை. கார் வாங்கியதை விமர்சிக்கிறார்கள். நாளை நான் விமானம் வாங்கினாலும் வாங்குவேன்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய சீமான், "நாம் செய்வதில் சிலருக்கு எது பிடிக்கவில்லையோ, அதைத்தான் தொடர்ந்து செய்வோம். எங்களைப் பற்றி பொய்களைப் பரப்புவார்கள், அவதூறு பேசுவார்கள். ஆனால் அதனால் எங்கள் பயணம் நிற்காது" என்றார்.

தமிழ் மொழி மற்றும் தமிழர் அடையாளம் குறித்து பேசிய அவர், "தமிழ் என்று உச்சரிக்காதவரிடமும், தமிழன் என்று சொல்லாதவரிடமும் நாட்டை ஒப்படைத்துவிட்டு இன்று பேசுகிறார்கள். நடிகருக்கும் தலைவருக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் செயல்படுகிறார்கள்" என்று மறைமுகமாக தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) விமர்சித்தார்.

மேலும், திரள்நிதி தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டிய சீமான், "எங்களை திரள்நிதி திருடர்கள் என்று கூறியவர்கள், இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலில் ஆட்டம் மாறி மாறித்தான் நடக்கும். இன்று ஒரு தரப்பிடம் இருக்கும் வாய்ப்பு, நாளை மற்றொரு தரப்புக்கு வரும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Im going to buy and fly a plane Who bought him the Benz car Seeman reveals the secret Harsh criticism directed at TVK as well


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->