6 தொகுதிகளுக்கு மேல் வேண்டும்.! திமுகவின் கூட்டணி கட்சி தலைவர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி, வரும் சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகலாய் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு, மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கி செயலாற்றி வருகின்றனர்.

அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் நிச்சயம் களமிறங்க உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகள், வரும் சட்டமன்ற தேர்தலில் மாறுபடலாம் என்றும், மூன்றாவது அணி உருவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐஜேகே தங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், எம்பியுமான பச்சமுத்து அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,

"மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சி பங்கேற்றது. வரும் சட்டமன்ற தேர்தலில், அரியலூர் சட்டமன்ற தொகுதியில் ஐஜேகே போட்டியிடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்வோம். ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள நாங்கள், தொகுதி பங்கீட்டின் போது 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணியில் எதிர்பார்த்துள்ளோம்." என்று ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ijk need 6 seat in assembly election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->