விஜய் தொடர்ந்து எதிர்ப்பு அரசியல் செய்தால் பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமைதான் 2026ல் விஜய்க்கும்-அண்ணாமலை தாக்கு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தளபதி விஜயையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்தார். பீகார் தேர்தல் வெற்றியின் உற்சாகத்தில் இருந்த அண்ணாமலை, 2026-ல் தமிழகமும் புதுச்சேரியும் என்டிஏ ஆட்சியைத் தேர்வு செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவரது பேச்சின் முக்கிய அம்சங்கள்:“பீகாரில் ஒற்றுமையே எங்களுக்கு பெரிய வெற்றியைத் தந்தது. பாஜக மட்டும் இல்லை… கூட்டணி கட்சிகளையும் வெற்றி பெறச் செய்தோம். அங்கு RJD எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துவிட்டது.ராகுல் காந்தி பிரசாரம் செய்த இடமெல்லாம் காங்கிரஸ் தோல்வி—அவரை மக்கள் ஏற்கவில்லை.”

“தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் போன்று எதிர்ப்பு அரசியல் மட்டும் பேசுகிறார்.எஸ்ஐஆரை அவர் எதிர்க்கிறாராம்—அதில் தவறு எது என்பதை விஜய் விளக்கட்டும்.

பீகாருக்கு தமிழகம், புதுச்சேரியில் இருந்து குழுவை அனுப்பி அவர் பார்த்து வரலாம்.அங்கு யாருடைய வாக்குரிமையை பறித்தோம் என்று நிரூபிக்கட்டும்.”

“மக்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்ல வேண்டும்.விஜய் தொடங்கிய கட்சி என்ன செய்யப் போகிறது என்பது தெரியவில்லை.பாஜகவுக்கு எதிராக பேசுவது மட்டும் அரசியல் அல்ல.”

“தொடர்ந்து எதிர்ப்பு அரசியல் செய்தால்,விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் பீகாரில் சந்தித்த அதே நிலை வரும்.PK 200-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டுதொகுதித் தேர்தலில் டெபாசிட் கூட காப்பாற்ற முடியாமல்,
வெறும் 3.55% வாக்குகள் தான் பெற்றார்.விஜய் இதை புரிந்து கொள்ள வேண்டும்.”

“தமிழகம், புதுச்சேரி—இரண்டிலும் 2026-ல் என்டிஏ வெற்றி பெறும்.பீகார் மாடல் போல ஒற்றுமையுடன் பணியாற்றுவோம்.தமிழக முதல்வர் ஸ்டாலின், பீகார் வெற்றியை பொறுக்காமல் வயிற்றெரிச்சலில் பேசுகிறார்.”அண்ணாமலையின் இந்த பேச்சு, தமிழக அரசியல் சூழ்நிலையை மேலும் சூடுபடுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If Vijay continues to do opposition politics the same situation will happen to Prashant Kishor party in 2026 Vijay will also attack Annamalai


கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?




Seithipunal
--> -->