'நான் பேசினால் உங்களுக்கு சிக்கல்'...! - சட்டசபையில் ஆதவ் அர்ஜூனா ஆவேச பதிலடி...! - Seithipunal
Seithipunal


சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது தி.மு.க. மற்றும் த.வெ.க. உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான கருத்து மோதல் ஏற்பட்டது. சமூகநீதி, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் மாறி மாறி கருத்துகளை முன்வைத்ததால் அவையில் பரபரப்பான சூழல் நிலவியது.விவாதத்தில் பேசிய உறுப்பினர், ரூ.1,000 கோடி மதிப்பில் அயோத்திதாசர் குடியிருப்பு திட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்ததாகவும், அம்பேத்கர் அயலக திட்டமும் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தேவையற்ற விவகாரங்களை முன்வைத்து சிலர் பிரச்சினையை வேறு திசைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சமூகநீதி குறித்து தொடர்ந்து பேசும் தி.மு.க., கடந்த ஆட்சிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சித்தார்.

மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலங்களில் குறுகிய காலத்திலேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்கக் கூடாது என தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய கோவி செழியன், அண்ணா கூறிய கருத்தை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெறும் கரண்டியுடன் வருபவர்களைப் போன்றவர்கள் என்றும், ஆளுங்கட்சியினர் எண்ணெயுடன் கூடிய கரண்டியைப் போல் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என்றும் அவர் கூறினார்.இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் ஒருவர் பேசிய கருத்துக்கு த.வெ.க. உறுப்பினர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து சம்பந்தப்பட்ட தி.மு.க. உறுப்பினர் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 2015 முதல் 2021-ம் ஆண்டு வரை தி.மு.க.வுக்காக தான் பணியாற்றியது அனைவருக்கும் தெரியும் என்றும், தி.மு.க. தலைவருக்கும் தனது பணிகள் குறித்து தெரியும் என்றும் தெரிவித்தார்.“நான் உண்மையாக பணியாற்றியவன். ஒரு பொறுப்பில் பணியாற்றியதை முடித்துவிட்டு அடுத்த பணிக்கு சென்றுவிட்டேன்” என்று அவர் கூறினார்.

மேலும், தனது கடந்தகால பணிகள் குறித்து பேசத் தொடங்கினால் அது தி.மு.க. தரப்புக்கு சாதகமாக இருக்காது என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடுமையாக பதிலளித்தார்.விவாதம் சூடுபிடித்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

“வாளுடன் வரும் எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சியினர் கேடயத்தைக் கொண்டு தடுக்க வேண்டும்; அதற்கு பதிலாக வாளை எடுத்து எதிர்த்து நிற்கக்கூடாது” என சபாநாயகர் தெரிவித்தார்.சபாநாயகரின் இந்த கருத்தைத் தொடர்ந்து அவையில் நிலவிய பரபரப்பு சற்று தணிந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If I speak you will have problems Adhav Arjuna furious response Assembly


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->