இனி ரெண்டே பேருக்குத்தான் போட்டியே! தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஓட்டு போட்டு கண்டிப்பாக வெற்றி பெற வைப்போம்! ரசிகைகள் சொன்ன வார்த்தை!
If Dhanush enters politics we will definitely vote for him and ensure his victory say his female fans
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி ரசிகைகள் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. "தனுஷ் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வாக்களித்து வெற்றி பெற வைப்போம்" என்று அவரது ரசிகைகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தி வருவதாகவும், பல்வேறு மாவட்டங்களில் ரசிகர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அண்மையில் திருவள்ளூரில் நடைபெற்ற அவரது பிறந்தநாள் விழாவில் ரசிகர்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டன. மேலும், ரசிகர் மன்றத்திற்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் தனுஷ் அரசியலுக்கு வரக்கூடும் என்ற பேச்சு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடிய தனுஷை வாழ்த்துவதற்காக ஏராளமான ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லம் முன்பு திரண்டனர். ரசிகர்களை பால்கனியில் இருந்து சந்தித்த தனுஷ், பின்னர் வெளியே வந்து அவர்களிடம் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.
அப்போது அங்கிருந்த ரசிகை ஒருவரிடம், "தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர், "தனுஷ் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஆதரவு அளிப்போம். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் அரசியலுக்கு வந்தால் வாக்களித்து வெற்றி பெற வைப்போம். மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் நிச்சயமாக அவரை ஏற்றுக்கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.
மற்றொரு ரசிகையும், "தனுஷ் அரசியலுக்கு வந்தால் முழு ஆதரவு கொடுப்போம். அவர் மக்களுக்காக நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்று கூறினார்.
தனுஷ் அரசியல் வருகை குறித்து ரசிகர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தாலும், நடிகர் தனுஷ் இதுவரை அரசியலுக்கு வருவது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், அவரது ரசிகர் மன்ற செயல்பாடுகள் மற்றும் சமூகநல நிகழ்ச்சிகள் காரணமாக, அவர் அரசியலில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
English Summary
If Dhanush enters politics we will definitely vote for him and ensure his victory say his female fans