குறிஞ்சிப்பாட்டில் பாடிய மலர்களை, மலர்மாரி பொழிகின்றேன்...! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


இன்று கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, 127-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் தொடங்கியது.இந்தக் கண்காட்சியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் அவர் அங்கு பல வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்த பொன்னியின் செல்வன் அரண்மனை, கரிகாலன் கல்லணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி., அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,"பெரும்புலவர் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் பாடிய மலர்களை, மலர்மாரி பொழிகின்றேன் என முத்தமிழறிஞர் கலைஞர் சங்கத்தமிழில் சொல்லியது சிந்தையில் தோன்ற, உதகை 127-ஆவது மலர்க்காட்சியைத் தொடங்கி வைத்தேன்.

உதகையின் குளுமையை அம்மக்களின் இனிமை மிஞ்சியது! " எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I shower flowers sung Kurinjipattu with flowers Chief Minister MK Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->