விஜய் எப்படி திமுக -தவெக -க்கு தான் போட்டி என்று சொல்லலாம்...?- நயினார் நாகேந்திரன் ஆவேசம்
How Vijay said competitor DMK TVK Nainar Nagendrans rage
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
மேலும், மழை காரணமாக சில தொகுதிகளில் பிரசாரம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவர் சேலம் இல்லத்தில் தங்கி இருந்தார்.இதன்போது, பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி சேலத்தில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க. தலைவரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அவருடன் அரவிந்த் மேனன், கே.பி. ராமலிங்கமும் இருந்தனர்.பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,"எடப்பாடியை மரியாதைக்காகவே பார்த்தேன், அரசியல் பேச்சு ஒன்றும் இல்லை” என்றார்.“அ.தி.மு.க. – பா.ஜ.க. அணிகள் இணைப்பு குறித்து நேரம் வந்தால் அறிவிப்பேன்” என்று குறிப்பிட்டார்.“
அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பர் என்பதே இல்லை” என்றும் சுட்டிக்காட்டினார்.“2026ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உறுதி” என்று நம்பிக்கை தெரிவித்தார்.“விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது; கூட்டம் வந்தால் தி.மு.க.–த.வெ.க. போட்டி என அவர் சொல்லக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.
English Summary
How Vijay said competitor DMK TVK Nainar Nagendrans rage