அஞ்சலி செலுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...!!! காஷ்மீர் பஹால்காம் திடீர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு...!
Home Minister Amit Shah paid tributes bodies those killed sudden attack Kashmirs Pahalgam
நேற்று ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், நேற்று பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வெளிநாட்டவர் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்துள்ளனர்.மேலும், இவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் 'அமித்ஷா' அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தோரின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.
இது தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
Home Minister Amit Shah paid tributes bodies those killed sudden attack Kashmirs Pahalgam