உடல் நலம் பாதிப்பு! மீனவர்களை பாதுகாப்பது மத்திய- மாநில அரசு பொறுப்பு...! - ஜி.கே. வாசன்
Health hazard It is responsibility central and state governments to protect fishermen Gk Vasan
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டதாவது,"தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனவே இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலில் இருந்து மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய- மாநில அரசுகளுக்கு உண்டு" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Health hazard It is responsibility central and state governments to protect fishermen Gk Vasan