இவர்தான் மாஸ்டர்மைண்ட்.. பார்த்துக்கோங்க.. விஜய் அறிமுகப்படுத்தும் புதிய கை..மிழ்நாடு இல்லத்தில் முக்கிய ஆலோசனை! - Seithipunal
Seithipunal


முதல்வர் விஜய், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதன்பிறகு தனியாக டெல்லி செல்லும் திட்டம் குறித்து கோட்டை வட்டாரங்களில் புதிய தகவல்கள் பரவி வருகின்றன.

வைகோவின் நாடாளுமன்ற உரைகள் தொகுக்கப்பட்ட நூலின் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 4-ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நூலை வெளியிடவும், முதல்வர் விஜய் அதைப் பெற்றுக்கொள்ளவும் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், தேசிய அளவிலான பல்வேறு அரசியல் தலைவர்கள், மூத்த வழக்கறிஞர்கள், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டால் அதிகளவில் மக்கள் திரளக்கூடும் என்பதால், டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்றும், பின்னர் சென்னையில் நடைபெறும் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறும் வைகோ கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், டெல்லி நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பான பணிகளுக்கு இடையில் டெல்லி செல்லும் வாய்ப்பை முதல்வர் விஜய் பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் தொழிலதிபர் வெங்கட்நாராயணா, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அமைச்சரவை அந்தஸ்து கொண்ட இந்தப் பதவி, மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகிறது.

இதையடுத்து, மத்திய அரசுப் பணியில் உள்ள தமிழக கேடர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வெங்கட்நாராயணாவை அறிமுகப்படுத்தும் வகையில், தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தும் யோசனை பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், மாநில அரசின் திட்டங்கள், மத்திய அரசுடன் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக ஒத்துழைப்பு தொடர்பாக விவாதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசில் பணியாற்றும் தமிழக கேடர் அதிகாரிகளுடன் டெல்லி பிரதிநிதிக்கு நெருக்கமான பணித் தொடர்பு உருவாகுவது, மாநிலத்தின் நிர்வாக மற்றும் நிதி தொடர்பான விவகாரங்களில் பயனளிக்கும் என்ற நோக்கிலேயே இந்த ஆலோசனைக் கூட்டம் திட்டமிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம் அல்லது தமிழ்நாடு இல்லத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக இதுவரை தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எனவே, இந்த தகவல்கள் அரசு மற்றும் அரசியல் வட்டாரங்களில் வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

He is the mastermind take a look A new face being introduced by Vijay a crucial consultation is underway at the Tamil Nadu residence


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->