மகிழ்ச்சி! முதலமைச்சர் டிஸ்சார்ஜ் குறித்து தகவல் தெரிவித்த மு.க. அழகிரி...!
Happy MK Alagiri informed about Chief Ministers discharge
அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக் காண குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அவ்வகையில்,இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார். அங்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.
மு.க.அழகிரி:
அதன் பிறகு, வெளியே வந்த மு.க.அழகிரி அவர்கள் நிருபர்களிடம் தெரிவித்ததாவது,"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார். நாளைமறுநாள் அவர் வீடு திரும்புகிறார்" என்று தெரிவித்தார்.
English Summary
Happy MK Alagiri informed about Chief Ministers discharge