மகிழ்ச்சி!தொலைநோக்கு சிந்தனையால் பிணைந்த இலட்சிய சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்து!- முதலமைச்சர்
Happy Birthday to ideal brother who is bound by visionary thinking Chief Minister
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் 'ராகுல் காந்தி'-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதாவது, "எனது இலட்சிய சகோதரருக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாம் இரத்தத்தால் அல்ல, தொலைநோக்கு சிந்தனை மற்றும் நோக்கத்தால் பிணைக்கப்பட்டவர்கள்.
நீங்கள் தொடர்ந்து உறுதியாக நின்று தைரியத்துடன் வழிநடத்துங்கள். பிரகாசமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில், வெற்றி நமதே" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல காங்கிரஸ் கட்சி தொண்டர்களும், எம் பி க்களும்,அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Happy Birthday to ideal brother who is bound by visionary thinking Chief Minister