சென்னையில் பாஜக எம்.பி., கொரோனாவால் உயிர் இழப்பு.! சோகத்தில் மூழ்கிய பாஜகவினர்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு, மத்திய மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகளாலும், மக்களின் ஒத்துழைப்பாளாலும் கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் என்பதால், தற்போது வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்த கொரோனாவின் தாக்குதலுக்கு பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட முன்கள பணியாளர்களும், அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய - மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அபய் பரத்வாஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அண்மையில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளான அபய் பரத்வாஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில், இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் அபய் பரத்வாஜ் உயிர் இழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Rajya Sabha MP Abhay Bharadwaj dead


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal