வளர்ச்சி விகிதம் 9.6 ஆக உயர்ந்து... இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகம் விளங்குகிறது...! - துணை முதலமைச்சர் உதயநிதி
growth rate increased 9point6 TN pioneer India Deputy CM Udhayanidhi
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோவையில் அமையவிருக்கும் சர்வதேச தரத்திலான ஹாக்கி விளையாட்டு மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் அவர் தெரிவித்ததாவது,"கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவே திரும்பி பார்க்கும் திட்டம்.மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமாக செயல் படுத்தப்படுகிறது.
எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் திராவிட மாடல் அரசு. அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றுகிறார்.
புதுமைப்பெண் திட்டம் மூலம் 3.5 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.பட்டா என்பது ஆவணம் மட்டும் அல்ல, அது உங்களுக்கான நிலத்தின் மீதான உரிமை.
இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 9.6 ஆக உள்ளது" எனது தெரிவித்துள்ளார்.
English Summary
growth rate increased 9point6 TN pioneer India Deputy CM Udhayanidhi