அன்பு தாயை இழந்த துயரம்…!- பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் சென்னைக்கு புறப்பட்டனர்...!
grief losing beloved mother Premalatha Vijayakanth and Sudheesh left for Chennai
தேமுதிக பொதுச் செயலாளர் 'பிரேமலதா விஜயகாந்த்' மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகி எல்.கே. சுதீஷ் ஆகியோருக்கு இன்று பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சுதீஷின் தாயார் அம்சவேணி அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. இவர் வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

அண்மையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அம்சவேணி இருந்தார். ஆனால் மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை அவர் அமைதியான மறைவு அடைந்தார்.
அவரது உடல் தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல், சினிமா, சமூகத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்த வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த துயரச் செய்தி அறிந்ததும், ஈரோட்டில் நடைபெற்ற பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பிரேமலதா விஜயகாந்தும் சுதீஷும் உடனடியாக அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து, சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
English Summary
grief losing beloved mother Premalatha Vijayakanth and Sudheesh left for Chennai