அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாததற்கு அரசின் அலட்சியப் போக்கே காரணம்...!- அரசை சாடிய ஜி.கே வாசன் - Seithipunal
Seithipunal


த.மா.கா. தலைவர் 'ஜி.கே.வாசன்' அவர்கள் 'ஓய்வூதியதாரர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது," கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருவதற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம்.

தமிழக தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றவில்லை.

இதுகுறித்து ஓய்வூதியதாரர்கள், அவர்களின் கோரிக்கைகளுக்காக நியாயமாக போராடிய போது கைது செய்ததும் நியாயமில்லை.

மேலும், அரசுப் போகுவரத்துக்கழக ஓய்வூதியதாரர்களின் பணிக்காலத்தையும், உழைப்பையும், தமிழக அரசு தேர்தல் நேர வாக்குறுதியையும், போராட்டங்களையும் கவனத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்ற தெரிவித்துள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

governments indifference reason not fulfilling their demands GK Vasan slams government


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->