அல்வா அரசு! வாக்குறுதி நிறைவேற்றம் பூஜ்யம்!-எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
government! Zero fulfillment of promises Edappadi Palaniswami strongly attacks
தமிழக சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.காஞ்சிபுரம் மருந்து நிறுவனத்தின் அலட்சியத்தால் மத்தியப் பிரதேசத்தில் 25 குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றம் சாட்டிய அவர், “2024–25ல் அந்த நிறுவனத்தில் சோதனை கூட நடத்தாதது திமுக அரசின் பெரும் தவறு" என்று தெரிவித்தார்.

மேலும் கிட்னி முறைகேடு விவகாரத்தில், “புரோக்கரை மட்டும் கைது செய்து திமுக எம்எல்ஏ மருத்துவமனையை காக்கும் அரசு இது” என குற்றஞ்சாட்டினார்.டெல்டா மாவட்ட விவசாயிகள் சாலையில் நெல் மூட்டைகள் குவிந்து துன்பப்படுவதாக கூறி, “நெல்லை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும்.
விவசாயிகள் விரோத அரசாக திமுக மாறி விட்டது,” என்றார்.திமுக அரசின் கடன் நிலை குறித்து, “4 ஆண்டுகளில் ₹4.52 லட்சம் கோடி கடன் எடுத்துள்ளனர்; ஆனால் மூலதனச் செலவு எங்கே? வருவாய் செலவில்தான் வீழ்ந்துவிட்டனர்,” என்று தாக்கினார்.
பாக்ஸ்கான் முதலீடு குறித்தும் அவர், “முதல்வர் கூறிய 15,000 கோடி முதலீடு வெறும் வெற்று அறிவிப்பு! எந்த துணை நிறுவனம் என சொல்ல முடியவில்லை,” என்றார்.
இறுதியாக, “திமுக அரசு மக்களை ஏமாற்றும் அரசு. 2021ல் வெளியிட்ட 525 அறிவிப்புகளில் 10% கூட நிறைவேற்றப்படவில்லை; மக்களுக்கு ‘அல்வா’ கொடுத்துவிட்டனர்,” என எடப்பாடி பழனிசாமி சாடினார்.
English Summary
government! Zero fulfillment of promises Edappadi Palaniswami strongly attacks