பெண்களுக்கு குட்நியூஸ்! பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்..மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது? முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பெண்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை மற்றும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் குறித்து ஆலோசனை நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. தேர்தலின் போது தமிழக வெற்றிக் கழகம், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, மே மாதத்திற்கான தொகையாக ரூ.1,000 மட்டுமே பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. இதனுடன், திட்டம் மறுசீரமைக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தகுதியற்ற பயனாளிகளை நீக்கி, உண்மையில் தேவையுள்ள பெண்களை திட்டத்தில் சேர்க்கும் வகையில் ஆய்வு மற்றும் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, மேம்படுத்தப்பட்ட திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் மாநில நிதிநிலை, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுடன் பெண்களுக்கான நலத்திட்டங்களும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது மற்றும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இருப்பினும், இதுகுறித்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு இதுதொடர்பான தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news for women Free bus travel for women When will the women entitlement amount be Rs 2500 Important announcement


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->