நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி...! தொடர்ந்து சறுக்கும் தங்கம் விலை...! இன்றைய வெள்ளி மற்றும் தங்கம் விலை நிலவரம் என்ன...?
pleasant surprise jewelers Gold prices continue slide What current silver and gold price situation
கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஏற்றத் தாழ்வுகளுடன் நகர்ந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குவோரின் கவனம் விலை நிலவரத்தின் மீது தொடர்ந்து நிலவி வருகிறது.கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை நாள்தோறும் மாற்றங்களை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து மாதத்தின் முதல் வர்த்தக நாளில் சவரனுக்கு ரூ.1,040 சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,500-க்கும் விற்பனையானது.
பின்னர் இரண்டு நாட்கள் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் வர்த்தகம் நடைபெற்றது.அதன்பிறகு நேற்று மீண்டும் விலை சரிவை சந்தித்த தங்கம், ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.14,480-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.1,15,840-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை தொடர்ந்து சரிவடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை மேலும் ரூ.50 குறைந்து ரூ.14,430-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.1,15,440-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையிலும் இன்றைய வர்த்தகத்தில் இறக்கம் பதிவாகியுள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.280-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
pleasant surprise jewelers Gold prices continue slide What current silver and gold price situation