சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு - காவல்துறை நடவடிக்கை!
Gem Veeramani Arrested in Another Case Over Harassment of Minor Girls
சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் இழைத்த புகாரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கும் ஜெம் வீரமணி மீது, தற்போது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மேலும் 2 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெம் வீரமணி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது பதிவாகியுள்ள இந்த வழக்கோடு சேர்த்து மொத்த வழக்குகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 10 சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைப் புகார்கள் தொடர்பாகக் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ச்சியாகப் பதிவாகும் புகார்களின் அடிப்படையில் காவல் துறையினர் இந்த வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்து வருவதால், இந்த விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
Gem Veeramani Arrested in Another Case Over Harassment of Minor Girls