தமிழக பட்ஜெட் 2026-27; பெண்கள் பெயரில் நிலம் பதிவு செய்தால் முழு விலக்கு; பெண்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்..?
Full exemption for registering land in the name of women announced in Tamil Nadu Budget 2026 to 27
விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவதும், நடப்பு நிதியாண்தி 2026-27 ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அவரது உரையில் முக்கியமாக கடந்த 05 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாகவும், அதிகமான வட்டியை செலுத்தி வருகிறதாகவும் தெரிவித்தார்.
அதன்பின்னர் அவரது பட்ஜெட் உரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் வாயிலாக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம் மோதிரம் வழங்கப்படும் என்றும், இந்த திட்டத்துக்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

அத்துடன், பெண்களின் திருமண நாளில் அரசின் சார்பில் எட்டு கிராம் தங்கம் நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் அண்ணனின் சீராக வழங்கப்படும் என்றும், இதற்காக 812 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், 'மண்ணின் மகள் திட்டம்' பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், பெண்கள் பெயரில் நிலம் பதிவு செய்தால் முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். விவசாயம் செய்வதற்கு நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும் என்றும் அதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யவும் வெற்றி தொழில்முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்ததோடு, மூலதன மானியம் மற்றும் வட்டி மானியம் பெற ஏதுவாக ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர்அறிவித்தார்.
அத்துடன், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஆடுகள் வளர்ப்பு திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதேப்போன்று, இலவசமாக 05 ஆடுகள் வழங்கப்படும் என்றும், அதற்காக 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும், 10,000 பெண்களுக்கு விலையில்லா கறவை மாடு வழங்க ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
English Summary
Full exemption for registering land in the name of women announced in Tamil Nadu Budget 2026 to 27