#Breaking || முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானார்.!! அதிர்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்.!! - Seithipunal
Seithipunal


சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக சார்பில் கடந்த 2016ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். பின்னர் கட்சி பதவி விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த கு.க.செல்வம் திடீரென டெல்லி சென்று பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த பிறகு திமுகவை விமர்சித்து பேசி வந்தார்.

இதனால் அவர் திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி திமுக தலைமை உத்தரவிடப்பட்டது. இதன் அதன் பிறகு அவர் 2020ம் ஆண்டு பாஜகவில் இணைந்து செயல்படத் தொடங்கினார். பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக அவர் பதவி வகித்தாலும் முக்கியத்துவம் அளிக்கவில்லை.

இதன் காரணமாக அவர் கடந்த 2022ம் ஆண்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் உடல் நலம்  குறைவு காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனால் திமுக உடன்பிறப்புகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former dmk MLA GK Selvam passed away


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->