நாசமா போனதே நம்மாலதான்... விரக்தியில் குமுறிய திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி! - Seithipunal
Seithipunal


மதுரையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தி, சமீபத்திய தேர்தல் தோல்வி குறித்து திமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதார்த்தமாகவும், அதே சமயம் கடுமையான விரக்தியுடனும் பேசியுள்ளார். பழங்காநத்தம் பகுதியில் 74-வது வார்டு கவுன்சிலர் சுதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று சக்கர ஆட்டோக்கள் வழங்கப்பட்ட பின்னர் அவர் மேடையில் உரையாற்றினார்.

தோல்விக்கு கைதட்டிய தொண்டர்கள் - மேடையில் வெடித்த மூர்த்தி:
விழா மேடையில் தேர்தல் தோல்வி மற்றும் மக்கள் கற்றுக்கொடுத்த பாடம் குறித்து மூர்த்தி பேசத் தொடங்கியதும், கீழே இருந்த தொண்டர்கள் வழக்கம்போல கைதட்டினர். இதனால் கோபமடைந்த அவர், "ஆமா.. தோத்துப் போனதுக்கு கைதட்டுங்க! அதனாலதான் விளங்காமல் உட்கார்ந்திருக்கோம். திமுக நாசமா போனதுக்குக் காரணமே திமுககாரன்தான்!" என்று மேடையிலேயே காட்டமாகக் கடிந்துகொண்டார்.

உள்வீட்டு அரசியலும் வாக்காளர் மனநிலையும்:
திமுகவிற்கு மக்கள் ஒரு நல்ல பாடம் புகட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கட்சியின் தற்போதைய பின்னடைவுக்குத் தொண்டர்களின் குடும்பத்தினரே காரணம் என்று சாடினார்.

மாறிய வாக்குகள்: "திமுக குடும்பத்தில் உள்ள பேத்தி சொல்லுச்சு, பேரன் சொல்லுச்சு, ஆத்தா சொல்லுச்சு என்று மாற்றி ஓட்டுப் போட்டதால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது" என்றார்.

புறக்கணிக்கப்பட்ட நன்மைகள்: மதுரை மேற்கு தொகுதியில் பூங்காக்கள், மீனாட்சி அம்மன் கோவில் நில விவகாரம் மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் இந்த ஓராண்டில் செய்து முடித்தும், மக்கள் நல்லது செஞ்சு ஓட்டுப் போடுவதை விட, ஒரு முடிவை முன்பே தீர்மானித்து ஓட்டுப் போட்டுள்ளதாக ஆதங்கப்பட்டார்.

"இனி நன்மைகளைப் பேசிப் பயனே இல்லை!" - புதிய வியூகம்:
மக்களுக்குச் செய்த நன்மைகளைச் சொல்லி இனி வாக்குக் கேட்கத் தேவையில்லை என்றும், மக்கள் தெரிந்தே மாற்றுத் தரப்பினருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார்கள் என்றும் மூர்த்தி குறிப்பிட்டார்.

ஒரிஜினல் திமுகவை வளர்ப்போம்: "இனிமேல் வெற்றிலை பாக்கு வைத்து யாரையும் கட்சிக்கு அழைக்க வேண்டாம். மக்களுக்கு எல்லாம் தெரியும். நாம் மக்களுக்குச் செய்ததைச் சொல்லிப் புலம்புவதை நிறுத்திவிட்டு, கட்சிப் பணியை மட்டும் ஆற்ற வேண்டும். எத்தனை பேர் உண்மையாக இருக்கிறார்களோ, அதுதான் நமக்கு வலு, அதுதான் கம்பீரம். உண்மையான, 'ஒரிஜினல்' திமுகவை வளர்ப்பதே இனி நம் வேலை" என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தியின் இந்த அதிரடியான பேச்சு தற்பொழுது திமுக தொண்டர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former DMK Minister P Moorthi Expresses Frustration Over Election Loss


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->