தவெகவை தவிர்த்து திமுகவில் இணைந்தது ஏன்..? கட்சித் தாவிய அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கூறியது..! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் திமுகவில் இணைந்து தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தினார்.  இவருடன் சேர்ந்து அதிமுக நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்துக்கொண்டனர்.

திமுகவில் இணைந்த பின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பெஞ்சமினிடம் ''பொதுவாக மாற்றுக் கட்சியினர் ஆளும் கட்சியை நோக்கி செல்வார்கள். ஆனால், நீங்கள் எதிர்க்கட்சியை நோக்கி வந்துள்ளீர்கள்'' என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ''இயக்கத்தில் களப் பணியாற்றி பழகப்பட்டவர்கள். அதிகார மையத்தை நோக்கி சென்றிருக்க வேண்டுமென்றால் சென்றிருக்கலாம். இன்று எதிர்க்கட்சியாக இருந்தாலும், திமுக கடந்த காலங்களில் கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை, இப்போது இருக்கும் அரசும் அதனை தொடரும் வகையில் இருக்கிறது.

 அப்படியான மக்கள் நலத் திட்டங்களை வகுத்து கொடுத்த இயக்கம், தொண்டர்களை அரவணைத்து செல்லும் இயக்கத்தில் என்னை இணைத்துக்கொண்டுள்ளேன்'' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், பெஞ்சமின் உள்ளோட்ட அதிமுகவின் கட்சியில் இணைத்துக்கொண்டமை குறித்து திமுக எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

''திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய  மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பா. பெஞ்சமின், தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த  திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் யாமினி இளையராஜா -   மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் தினேஷ்  - 155வது வட்டக் கழக செயலாளர்  ராஜ்குமார் பச்சையப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former AIADMK Minister Benjamin explains why he joined the DMK instead of TVK


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->