ரூ.888 கோடி ஊழலை மறைத்த திமுகவின் போலி முகம் அம்பலப்படும் ...! - திமுக மீது அண்ணாமலை வெடிகுண்டு வீச்சு  
                                    
                                    
                                   fake face DMK which hid 888 crore scam exposed Annamalai bombshell DMK
 
                                 
                               
                                
                                      
                                            பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பதிவில் கடும் தாக்குதலுடன் தெரிவித்துள்ளதாவது,"திமுகவின் ஊழல், போலி முகம் மக்கள் மத்தியில் வெளிச்சத்துக்குவரும் போதெல்லாம், அதனை மறைக்க பிரிவினை அரசியல் தூண்டுவது அவர்களின் வழக்கம்.சமீபத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் ₹888 கோடி ஊழல் வெளிச்சத்துக்குவந்தவுடன், அதை மூடிமறைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் துவங்கியிருக்கும் முயற்சி தெளிவாக தெரிகிறது.

பீகார் மாநில மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியது முழுக்க உண்மைதான். திமுகவின் அமைச்சர்கள் பொன்முடி, டி.ஆர்.பி. ராஜா, தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோர் முதல், கடைநிலை நிர்வாகிகள் வரை பீகார் மக்களை ஏளனமாகவும் தாக்குதலுக்குத் தூண்டும் வகையிலும் பேசியது தமிழக மக்கள் மறக்கவில்லை,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை மேலும் தெரிவித்ததாவது,"முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட காணொளியிலே பிரதமர் கூறியதைத் தவறாக விளக்கி, பீகார் மக்கள் குறித்த கருத்தை தமிழக மக்கள்மீது வைத்த குற்றச்சாட்டாக மாற்ற முயற்சி செய்வது அவமானகரமான அரசியல்.திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்கள்.
பிரதமர் திமுகவினரைக் குறித்ததை தமிழக மக்கள்மீது சாய்க்கும் முயற்சி, முதல்வர் பதவிக்கே அவமானம்.தாத்தா காலத்தில் தொடங்கிய அற்ப அரசியல், பேரன் காலத்திலும் தொடர்வது வருத்தகரமானது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கடுமையாக பதிவிட்டுள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       fake face DMK which hid 888 crore scam exposed Annamalai bombshell DMK